Settings

முகப்பு/செய்திகள்/கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
செய்திகள்

கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

🕒 23 அக்., 2026, 11:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கர்நாடகாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 209 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வழியாக கர்நாடகாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் மது பாட்டில்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பண்ணாரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாகச் சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிச் சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 209 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோட்டுப்புள்ளாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 209 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔