Settings

முகப்பு/செய்திகள்/தூத்துக்குடி கொலை சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்.பி
செய்திகள்

தூத்துக்குடி கொலை சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்.பி

🕒 23 அக்., 2026, 11:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தூத்துக்குடி கொலை சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்.பி

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதலில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் இன்று அதிகாலை வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மேரி ரெஜிலா (39) உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் (50), மகன் பிளஸெட் ராஜா (10) ஆகியோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மாயமான நிலையில், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிளஸெட் ராஜா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து, உயிரிழந்த மேரி ரெஜிலாவின் உடலுக்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையையும் அவனது 10 வயது மகனையும் நேரில் பார்த்தது மனதை பதைபதைக்க வைப்பதாகக் கூறினார். அந்தச் சிறுவனின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும், தந்தையின் உடலெங்கும் ஆழமான வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔