பெரம்பலூர் இந்திய அளவில் குறைந்த அளவு கட்டணத்துடன் பொது போக்குவரத்து சேவையில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு தற்போதைய த வெ க அரசின் வெற்றி பயணம் திட்டத்தால் பெரிய அளவில் நலிவை சந்திக்க போவதுடன் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவையில் சுமார் 53 வழித்தடதனியார் பேருந்துகளும், கிராமப்புறங்களில் ஏராளமான மினி பேருந்துகளும், மற்றும் 500 - க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தால் தனியார் போக்கு வரத்து நிறுவனங்கள் 70% விழுக்காடு வரை இழப்பை சந்தித்து வருவதாக பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றர். இதேபோல் வெற்றி பயணத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனியார் போக்குவரத்து நிறுவனத்தினர் அரசுக்கு பல்வேறு வகைகளில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் இன்று நடைபெற்றது. இதில் அரசின் மகளிர் இலவச பேருந்து சேவை திட்டத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளிலிருந்து மீள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வெற்றி பயணம் திட்டத்தால் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பொது போக்குவரத்து சேவையில் தனித்துவமாக திகழ்ந்து வந்த தனியார் போக்குவரத்து தொழில் வரலாற்றில் முதல்முறையாக பெரும் நலிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக கவலை தெரிவித்தனர் இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வருடத்திற்குள் தனியார் பேருந்து நிறுவனங்கள் பேரிழப்பை சந்தித்து தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும் தனியார் பேருந்து சேவை முடக்கம் வெறும் முதலாளிகளுக்கான இழப்பு மட்டுமல்ல அதை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர் குடும்பத்தினர் உள்ளனர் அவர்களும் தமிழர்கள் தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தனியார் பேருந்துகள் மூலம் ஆண்டுக்கு சாலை வரி மற்றும் GST வருவாய் என 8ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரும் நிலையில் அரசு இந்த வெற்றி பயணம் திட்டத்தால் இரட்டிப்பு இழப்பை சந்திக்கும் சூழல் உள்ளதாக எச்சரித்துள்ள தனியார்பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வாகன உதிரிபாகம் தயாரிப்பு, ஆட்டோமொபைல்ஸ் துறை, கரூர் பஸ்பாடிகட்டும் தொழில், மற்றும் போக்குவரத்து சார்ந்த சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என பல லட்சம்தொழிலாளி களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு கவனத்தில் கொண்டு வெற்றி பயணம் திட்டத்தை முறைப்படுத்தி வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிடில் இந்திய அளவில் இது நாள் வரை பொது போக்குவரத்து சேவையில் முதலிடம் வகித்தது தமிழ்நாடு என்ற நற்பெயரை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பேட்டி ராம்குமார் - (தேவகி டிரான்ஸ்போர்ட்) தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பெரம்பலூர்

