தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான ஸ்கேட்டிங் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவி, தவெக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக அரசின் முதலமைச்சர் கோப்பைக்கான ஸ்கேட்டிங் போட்டியில் முதல் பரிசு வென்றவர் P. அஷ்ரீத்தா. இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி இணை ஒருங்கிணைப்பாளர் P. தமிழரசியின் மகள் ஆவார்.
இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி அஷ்ரீத்தா, விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக கழகச் செயலாளர் குஷி N. மோகன்ராஜை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

