தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சில நாட்களுக்குச் சுழல் சுற்றுலாவைத் தவிர்க்குமாறு வனத்துறை அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் தொடர் மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவு மற்றும் காற்றாற்று வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஊட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு ஊட்டிக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

