Settings

முகப்பு/செய்திகள்/தவெக மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்த கிராம மக்கள்
செய்திகள்

தவெக மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்த கிராம மக்கள்

🕒 24 அக்., 2026, 06:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தவெக மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்த கிராம மக்கள்
✨

AI Highlights

  • •தவெக மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்த கிராம மக்கள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளர் முனுசாமி, ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பிரகாசம், மற்றும் சின்ன வேப்பம்பட்டு, ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட சுமார் 50 பேர் ஊராட்சி அலுவலகத்தைத் திறந்து கட்சிக் கூட்டம் நடத்தியதாகவும், மேலும், சின்னவேப்பம்பட்டு, ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில், புருஷோத்தமன் சாவியைப் பெற்று வந்து அலுவலகத்தைத் திறந்ததாகவும், அங்கு தவெக நிர்வாகிகள் கூட்டம் நடத்தியதுடன், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கிராமப் பதிவேடுகளை எடுத்துப் பார்வையிட்டதாகவும், இதன் காரணமாக ஊர் பொதுமக்கள் ஒன்றாக திரண்டு மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அங்கிருந்து சென்ற நிலையில், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அனுமதியின்றி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார்களா? பதிவேடுகளை ஆய்வு செய்தார்களா என்பது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்..

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔