Settings

முகப்பு/செய்திகள்/கனமழையால் இடிந்து விழும் அபாயத்தில் கூரை வீடுகள் - மக்கள் அச்சம்
செய்திகள்

கனமழையால் இடிந்து விழும் அபாயத்தில் கூரை வீடுகள் - மக்கள் அச்சம்

🕒 24 அக்., 2026, 07:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கனமழையால் இடிந்து விழும் அபாயத்தில் கூரை வீடுகள் - மக்கள் அச்சம்
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 15 ஆண்டுகளாக கான்கிரீட் வீடு கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டிக்குப்பம் கிராமம் பொட்டாங்காடு தெருவில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட கூரை வீட்டு வாசிகள், கடந்த 15 ஆண்டுகளாக கான்கிரீட் வீடுகள் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பான்மையானோர் கூலித் தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தங்களது சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க இயலாத நிலையில், தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள், அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔