திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொம்மேஸ்வரம் பகுதியில் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த சண்டை சேவல் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சண்டை சேவல் திடீரெனக் காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த பெருமாள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, இரண்டு பேர் சாவகாசமாக நடந்து வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சண்டை சேவலைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

