Settings

முகப்பு/செய்திகள்/வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை.
செய்திகள்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை.

🕒 26 அக்., 2026, 01:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை.

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு திருவாருர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போது அர்னாப்புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை உள்ளதால் திருவாருர் மாவட்டத்தில் அதிக மழைபொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர், ஆற்று ஓரங்களில் வசிப்போர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஸ்குமார் அவர்கள் உத்தரவின்படி மாநில பேரிடர் மீட்பு குழுவினரால் (SDRF) பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் 7 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாருர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தலா ஒரு மீட்பு குழுவும் மாவட்ட ஆயுதப்படையில் 2 மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களை திருவாருர் மாவட்ட ஆயுதப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஸ்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். பொதுமக்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலககைபேசி எண்: 9498100865 அல்லது வடகிழக்கு பருவமழை வெள்ளக்கட்டுப்பாட்டு அறை 04366-1077, 04366-226623 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔