நெல்லை மாவட்டம் பரப்பாடியைச் சேர்ந்தவர் யுனைசி கிரேனா. இவர் அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கிப்சன் மற்றும் சில ஆசிரியர்களுடன் இன்று நெல்லை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் திடீரென கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்து தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு திரண்டு வந்தனர். தனக்கு உரிய பணி பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதை அடுத்து முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அங்கு வந்து ஆசிரியையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்ட நியதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக சிஇஓ உறுதி அளித்தார். இதை அடுத்து ஆசிரியை யுனைசி சிகேனா முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 2023 முதல் 26 ஆம் ஆண்டு வரை ஊதிய உயர்வை பெற்றுத்தர வேண்டும். எனது பழைய ஜி பி எப் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை முறைப்படுத்தி பிஎஃப் அக்கவுண்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பி. எட்., சான்றை முறைப்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆறாது ஊதிய நிலுவைத் தொகைகளையும் 2010 மற்றும் 11ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை அனுமதித்தும் அரசு பள்ளிக்கு பணி நிரவல் பணியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்து கலைந்து சென்றார். இவரது திடீர் தர்ணா போராட்ட காரணமாக முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்திகள்
சிஇஓ அலுவலகத்தில் ஆசிரியை காத்திருப்பு போராட்டம்: போலீசார் குவிப்பு
🕒 22 ஆக., 2026, 10:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

