Settings

முகப்பு/செய்திகள்/சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது: மான் இறைச்சி பறிமுதல்
செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது: மான் இறைச்சி பறிமுதல்

🕒 21 அக்., 2026, 03:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது: மான் இறைச்சி பறிமுதல்
✨

AI Highlights

  • •சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புள்ளி மானை வேட்டையாடி கொன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட புள்ளி மானின் இறைச்சி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பரப்பட்டா காப்புக்காடு மற்றும் எக்கத்தூர் பிரிவு பவர் லைன் காப்புக்காடு பகுதியில், கடம்பூர் வனச்சரக அலுவலர் சிவசங்கரன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் கடம்பூர் காந்திநகரைச் சேர்ந்த சடையப்பன் (62), பசுவராஜ் (45) மற்றும் மயில்சாமி (25) என்பதும், அவர்கள் ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கொன்று சாக்கு பையில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அவர்கள்ளிடமிருந்து சுருக்கு கம்பி, கத்தி மற்றும் இறந்த நிலையில் இருந்த புள்ளி மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனர்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சடையப்பன், பசுவராஜ், மயில்சாமி ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கடம்பூர் வனத்துறையினர், அவர்களைக் கைது செய்து பவானி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வனவிலங்குகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔