விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை, நவம்பர் 19, 2026) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், விழுப்புரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை நேரில் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான புகார் மனுக்களை அளித்து உடனடி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









