விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது,. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவில் உள்ள பார்வைக் கோபுரம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது தற்பொழுது பூங்கா பணிகள் துவங்கி முதற்கட்டமாக பூங்கா வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . அது ஒரு புறம் இருக்க கிழவன்கோயில் முதல் பிளவக்கல் பெரியாறு அணைக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காத ஏற்கனவே இருந்த சாலை தோண்டப்பட்டு அதன் மீது ஜல்லிகள் மட்டும் போடப்பட்டுள்ளது. ஜல்லிகற்களை போட்டுவிட்டு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதை அறிந்து சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சாலையை ஆய்வு செய்து பணிகளை விரைவில் துவங்க அதிகாரிகளுக்கும் , ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் தற்பொழுது கிழவன்களின் முதல் பிளவக்கல் அணை வரை பாதி நிறுத்தப்பட்ட சாலை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது .இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sports
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது..
The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 12:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
