விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் அரசு கலை கல்லூரியில் தமிழ் துறை சார்பில் தமிழர் பண்பாட்டு மரபு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழர்களின் வாழ்க்கை முறை, மடலேறுதல், பாரம்பரிய விவசாயம், பழமையான தமிழ் புழங்கு பொருட்கள், சங்க கால நாணயங்கள், கல்வெட்டு செய்திகள், கிராம புற பெண்களின் விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு இலக்கிய தகவல்கள், அளவை பொருட்கள், பாரம்பரிய சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள், ஐந்து வகை நிலம், தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பூக்கள் என பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையிலான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை அங்கு பயிலும் மாணவ மாணவிகள் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டதுடன், பழந்தமிழர் வாழ்க்கை முறை குறித்து தெரிந்து கொண்டனர்.
விளையாட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரியில் தமிழர் வாழ்வியல் குறித்த பண்பாட்டு மரபு கண்காட்சி நடைபெற்றது.
🕒 25 ஜூலை, 2026, 09:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
