Settings

முகப்பு/செய்திகள்/கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு
செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு

🕒 2 அக்., 2026, 09:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றாமல் பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டையூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும், ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் கணக்குகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததாகக் கூறி பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.மேலும், கிராமசபை கூட்டம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அதிகளவில் அழைத்து வந்து கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் தெரிவித்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகளை முழுமையாகவும் வெளிப்படையாகவும் பொதுமக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி செயலாளர்களிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது, செலவிடப்பட்டதாக கூறப்படும் தொகைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து கொடுக்கப்படாத நிலையில், பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருப்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. இறுதியில், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றாமல் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கலைந்து சென்றனர். கோட்டையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை வெளிப்படையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமசபை கூட்டத்திலேயே ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் திரண்டதால், கோட்டையூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔