புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யவில்லை. கனமழை பெய்யும் என்று கூறிய நேரங்களில் லேசான தூறலோடு நின்று போய் விட்டது. இந்நிலையில் வானிலை அறிக்கை இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்திருக்கும் வேளையில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட நிறைய இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதை கண்டறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டார். பின்னர் குப்பை அள்ளும் வாகனங்களையும் ஊழியர்களையும் வரச் செய்து பெரும் மேடுகளாகக் கிடந்த குப்பைகளை அள்ளி அகற்றச் செய்தார்.
செய்திகள்
குப்பைகளை அள்ளச் சொல்லி களத்தில் குதித்த புதுக்கோட்டை எம் எல் ஏ முத்துராஜா.
🕒 23 அக்., 2026, 10:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •குப்பைகளை அள்ளச் சொல்லி களத்தில் குதித்த புதுக்கோட்டை எம் எல் ஏ முத்துராஜா.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
