Settings

முகப்பு/செய்திகள்/புதிய அரசு பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கார்த்திக்!
செய்திகள்

புதிய அரசு பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கார்த்திக்!

🕒 23 அக்., 2026, 10:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புதிய அரசு பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கார்த்திக்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்து, தாமே சிறிது தூரம் இயக்கிச் சென்றார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்தப் பேருந்தை அவரே சிறிது தூரம் இயக்கிச் சென்று தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து பணிமனைக்குக் கூடுதலாகப் பேருந்துகள் ஒதுக்க வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அரசு சார்பில் ஏழு புதிய பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பேருந்தைச் சட்டமன்ற உறுப்பினர் தாமே ஓட்டிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். பின்னர், பேருந்தில் பயணித்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔