தமிழக அரசு கூறியது போல் அரசுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்று வருவதை தடுத்து நிறுத்தி அரசு கஜானாவிற்கு பணத்தை கொண்டு வருவோம் என கூறினீர்கள். அதை செய்தாலே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன் பேட்டி.ஆசிரியர்களுக்கு அதிக அளவு பணிச்சுமை இருந்து வருவதாகவும் அந்த ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்* விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக நிறுவனர் மாயவன் கலந்து கொண்டார் அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நிறுவனத் தலைவர் மாயவன் பேசுகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் மற்றும் ஆட்சி பொறுப்பில் உள்ள அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் அரசுக்கு நான்கு கோரிக்கைகளை முன் வைப்பதாகவும் தெரிவித்தார் தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் புதிய அரசால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர முடியும் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு கூறியது போல் தமிழக அரசின் கஜானாவுக்கு வர வேண்டிய பணமெல்லாம் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரத்தில் இருப்பவர்களின் வீடுகளில் உள்ள கஜானாவை நிரப்பியுள்ளது அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என கூறினீர்கள் அந்த பணத்தை அரசின் கஜானாவிற்கு கொண்டு வந்தால் அதன் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியும் கடந்த 25 ஆண்டுகளாக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணி வழங்க முடியும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி இல்லை என கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, புதிய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் மேலும் 60 அல்லது 70 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என்பதை மாற்றி அமைக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும் 25 ஆண்டுகளாக பணிபுரிந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் அதற்கு 15 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் உயர் கல்வி தகுதி பெற்றால் 5 மதிப்பெண் வழங்க வேண்டும் மொத்தம் 55 மதிப்பெண்கள் எடுத்தால் ஆசிரியர் தகுதி தேர்வான TET தேர்ச்சி பெற்றதாக அரசு மாற்றி அமைக்க வேண்டும் அதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அதிகப்படியான பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் வங்கி கணக்கு துவங்கதிலிருந்து காலணிகள் வழங்குவதற்கு கணக்கெடுப்பது என பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி வழங்கக்கூடாது, மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருபோதும் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்களை பயன்படுத்துங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கும் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பயன்படுத்தாதீர்கள் என தெரிவித்தார் பேட்டி: மாயவன் - நிறுவனர் (தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் கழகம்)
Politics
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன் பேட்டி
The News Outlook
🕒 12 ஜூலை, 2026, 05:21 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

