ஈரோடு: தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டக் குழு சார்பில் ஈரோட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, அவர்கள் அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.









