சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தேசிய நெடுஞ்சாலை-744 நில உரிமையாளர்களுக்கு சிறப்பு முகாம்: இழப்பீடு பெற ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு
செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை-744 நில உரிமையாளர்களுக்கு சிறப்பு முகாம்: இழப்பீடு பெற ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு

🕒 21 ஆக., 2026, 11:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேசிய நெடுஞ்சாலை-744 நில உரிமையாளர்களுக்கு சிறப்பு முகாம்: இழப்பீடு பெற ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வடுகப்பட்டி முதல் தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை–744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு பெறாத நில உரிமையாளர்களுக்காக சிறப்பு ஆவண சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொருட்டு, நில உரிமையாளர்களிடமிருந்து உரிமை ஆவணங்களை பெற இந்த முகாம்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறவுள்ளன.

ராஜபாளையம் வட்டம் – முகாம் அட்டவணை

அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 01.09.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 03.09.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 08.09.2026 புத்தூர் கிராமத்திலும், 10.09.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 11.09.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 15.09.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 01.09.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 03.09.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 08.09.2026 அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி கிராமத்திலும், 10.09.2026 பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும், 11.09.2026 களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி கிராமத்திலும், 15.09.2026 பிள்ளையார்குளம் கிராமத்திலும், 17.09.2026 குன்னூர் கிராமத்திலும், 22.09.2026 விழுப்பனூர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், நடைபெற உள்ளது.

ஆட்சியரின் அறிவுரை

தேசிய நெடுஞ்சாலை–744 திட்டத்திற்காக நிலம் வழங்கியிருந்தும், இதுவரை நில உரிமை ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் மேற்கண்ட சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தேவையான ஆவணங்களை அளித்து இழப்பீட்டுத் தொகை பெறும் நடைமுறையை நிறைவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔