திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அரசுப் பள்ளியில் பயின்று வந்த மூன்று மாணவிகள் காணவில்லை எனப் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அக்டோபர் 26 அன்று பள்ளிக்குச் சென்ற 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து இன்று தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தனர்.
செஞ்சி சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முழுமையடையாத நிலையில், அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

