Settings

முகப்பு/செய்திகள்/போதை தலைக்கேறியதால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்... கஞ்சாவுடன் சிக்கிய மகன்!
செய்திகள்

போதை தலைக்கேறியதால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்... கஞ்சாவுடன் சிக்கிய மகன்!

🕒 27 அக்., 2026, 04:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதை தலைக்கேறியதால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்... கஞ்சாவுடன் சிக்கிய மகன்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கஞ்சா போதையில் தாய் மற்றும் தந்தையைத் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில், கஞ்சா போதையில் பெற்ற தாய் மற்றும் தந்தையைத் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பையனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவரது மகன் பிரசாத் (27). இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் அதிக போதையில் வீட்டிற்கு வந்த பிரசாத், தனது பெற்றோரிடம் தகராறு செய்து அவர்களைத் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், பிரசாத்தைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்த மற்றும் பெற்றோரைத் தாக்கிய குற்றத்திற்காக பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔