சீனாவில் மின்கம்பியில் பாம்பு போல வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் அதிநவீன ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உண்மையான பாம்பு என நினைக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, மின் விநியோகக் கம்பிகளை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
பாம்பு போல ஊர்ந்து செல்லும் ரோபோ
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியில் 10 கிலோவோல்ட் மின் கம்பிகளில் இந்த பாம்பு வடிவ ரோபோ ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மின்கம்பியை சுற்றிப் பிடித்தபடி வளைந்து நெளிந்து நகரும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. மேலும், மின் கம்பிகளில் இருக்கும் தடைகளையும் தானாக அடையாளம் கண்டு அவற்றை கடந்து செல்லும் திறன் இந்த ரோபோவுக்கு உள்ளது.
கேமரா, சென்சார்களுடன் கண்காணிப்பு
இந்த ரோபோவில் உயர் தர கேமராக்கள் மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் மின் கம்பிகளில் ஏற்படும் சேதம், தேய்மானம் மற்றும் வழக்கத்துக்கு மாறான வெப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டறிய முடியும்.இதன் மூலம் மின் கம்பிகளில் ஏற்படக்கூடிய பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து, மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை விட 3 மடங்கு வேகம்?
இந்த ரோபோ இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான மின் விநியோகக் கம்பிகளை ஆய்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் நேரடியாக மேற்கொள்ளும் ஆய்வுடன் ஒப்பிடும்போது, இந்த ரோபோ சுமார் 3 மடங்கு வேகமாக

