விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகிய தேவேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி சுபாரத்தினம் தம்பதியினர். இவர்கள் 15 வருடங்களாக மாடு வளர்த்து பால் விற்பனை செய்து தங்கள் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துலுக்கன்குளம் கண்மாய் அருகே காவலர் நவீன் என்பவரின் தோப்பை முத்துச்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் அவரது தோப்பின் அருகே மாடு மேய்ச்சலில் இருந்தபோது வன விலங்குகளை வேட்டையாட வைத்திருக்கும் கைத்திரி வெடிகுண்டை மாடு கடித்ததால் பலத்த சத்தத்துடன் வெடித்து 8 மாத சினையான மாடுவின் வாய் தாடை கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது வனத்துறையினரிடம் புகார் அளியுங்கள் என்று கூறியதாகவும் வனத்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மாட்டின் உரிமையாளரை அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு 8 மாதம் சினையான மாடு வை அழைத்துக் கொண்டு சென்றதால் புகார் மனு வாங்கப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டு வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள்
சினைமாட்டின் வாயை சிதைத்த கைத்திரி வெடிகுண்டு!
🕒 18 ஆக., 2026, 06:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
