சிவகாசி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் முதுகெலும்பாக திகழும் தூய்மை பணியாளர்களால்தான் நாடும் வீடும் சுத்தமாக உள்ளது, உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முதல்வர் விஜய்க்கும் எனக்கும் உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர் தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் அரசின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் நிலையில் அதனை தூய்மை பணியாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய அமைச்சர் கீர்த்தனா, உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தன்னை நேரில் அணுகுமாறும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கிய அமைச்சர் கீர்த்தனாவை சூழ்ந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் அமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து அவர்களிடம் குறைகளை நேரில் கேட்ட அமைச்சரிடம் தங்கள் பணி சார்ந்த குறைகளையும், தங்களுக்காக அரசு கட்டிக் கொடுத்துள்ள குடியிருப்பு சேதமாகியுள்ளது குறித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது குறித்தும் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். குறைகளை கண்டறிந்த அமைச்சர் நேரில் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்ததாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
Politics
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் கீர்த்தனாவை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்த தூய்மை பணியாளர்கள்.
The News Outlook
🕒 22 ஜூலை, 2026, 07:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
