Settings

முகப்பு/செய்திகள்/அந்தரத்தில் தொங்கும் சாலை: எந்த நேரத்திலும் சரியும் அபாயம்!
செய்திகள்

அந்தரத்தில் தொங்கும் சாலை: எந்த நேரத்திலும் சரியும் அபாயம்!

🕒 24 அக்., 2026, 09:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அந்தரத்தில் தொங்கும் சாலை: எந்த நேரத்திலும் சரியும் அபாயம்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் நிலச்சரிவால் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் சாலையால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிரைப் பிடித்துக்கொண்டு இயக்கப்படும் பேருந்துகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் – மேலூர் கூட்டுச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, எந்த நேரத்திலும் சாலை முழுமையாகச் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. சேதமடைந்த சாலையின் ஓரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லும்போது, பெரும் விபத்துகள் நேரிடுமோ என்ற பீதி பயணிகள் மற்றும் ஓட்டுநர்களிடையே நிலவுகிறது.

மேலும், சாலையின் ஓரங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கூடுதல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மண் அரிப்பு மேலும் தீவிரமடைந்து சாலை மேலும் சரியக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் மிகுந்த ஆபத்தான சூழலில் உயிரைப் பணையம் வைத்து அரசுப் பேருந்துகளை இயக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔