விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: வெயிலின் தாக்கத்திற்கு பின் குளுமையான சூழல்! விருதுநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் தொடும் அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், மாலையில் வானில் மேகமூட்டம் திரண்டு, விருதுநகர் நகரம் உட்பட லட்சுமி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சூலக்கரை, பாண்டியன் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையிலிருந்து வாட்டி வதைத்த வெயிலின் சூடு தணிந்து, பகுதி முழுவதும் குளிர்ந்தக் காற்று வீசுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
செய்திகள்
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: வெயிலின் தாக்கத்திற்கு பின் குளுமையான சூழல்!
🕒 19 ஆக., 2026, 01:12 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
