Settings

முகப்பு/செய்திகள்/மாணவர்களுக்கு தரமான உணவு உறுதி: கலெக்டர் அதிரடி ஆய்வு!
செய்திகள்

மாணவர்களுக்கு தரமான உணவு உறுதி: கலெக்டர் அதிரடி ஆய்வு!

🕒 8 அக்., 2026, 04:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவர்களுக்கு தரமான உணவு உறுதி: கலெக்டர் அதிரடி ஆய்வு!
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்துத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந. மிருணாளினி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டமாக 519 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 26,176 மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 22.09.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 218 அரசுப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 3 அரசுப் பள்ளிகள், 3 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 241 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 18,161 மாணவ, மாணவிகள் தற்போது புதிய பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவுப் பட்டியல் விவரம்:

  • திங்கள்: வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்
  • செவ்வாய்: கோதுமை ரவா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார்
  • புதன்: வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்
  • வியாழன்: ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
  • வெள்ளி: சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார்

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையில், திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சத்துணவுத் துறை அலுவலர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வானதிரையன்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔