Settings

முகப்பு/செய்திகள்/ஓராண்டாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
செய்திகள்

ஓராண்டாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

🕒 6 அக்., 2026, 04:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஓராண்டாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
✨

AI Highlights

  • •பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூரில் கடந்த ஓராண்டாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அரியலூர்-திட்டக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வ.கீரனூர் கிராமத்தில் கடந்த ஓராண்டாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, பொதுமக்கள் அரியலூர்–திட்டக்குடி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக, அரியலூர்-திட்டக்குடி சாலையில் பள்ளி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதே குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கு முன்பும் இதே பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு வ.கீரனூர் கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔