இந்த கூட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு தமிழக அரசு விதிமுறை என்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்துவதை கண்டித்தும், கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிமாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக வருகின்ற 28.8. 2026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என இந்த ஆயத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த ஆயுத்த கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜெகதீஷ்குமார், மாவட்டத்தலைவர் பெருமாள்ராஜ் அரசுப் பணியாளர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜா, மற்றும் ஏடிபி . எல்பி எப்,எஸ் சி எஸ் டி விற்பனையாளர் சங்கம் பி. எம் எஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்திகள்
விருதுநகரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்
🕒 18 ஆக., 2026, 08:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
