திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் மாணிக்க ராஜா 41 வயதான இவர் 12 வயது சிறுமிக்கு நம்பிராஜன் என்ற வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இதனை அடுத்து 12 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இதில் சிறுமியும் தாயும் முன்னுக்குப் பின் பல தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது தொடர் விசாரணையில் நம்பிராஜன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்பது உறுதியானது இதனை அடுத்து போக் சோ சட்ட பிரிவின் அடிப்படையில் புகார் அளித்த இசக்கியப்பன் மாணிக்கராஜா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் நம்பிராஜன் என்ற இளைஞருக்கும் சிறுமியின் தாய்க்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை பயன்படுத்தி அவர் மீது இசக்கியப்பன் மாணிக்கராஜா போச்சோ புகார் அளித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது
செய்திகள்
புகார் கொடுத்தவருக்கே போக்சோ வழக்கு! வள்ளியூரில் பரபரப்பு
The News Outlook
🕒 8 ஆக., 2026, 10:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
