Settings

முகப்பு/செய்திகள்/16 அம்ச கோரிக்கைகள்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓய்வூதியர்கள் தர்ணா!
செய்திகள்

16 அம்ச கோரிக்கைகள்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓய்வூதியர்கள் தர்ணா!

🕒 28 அக்., 2026, 07:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
16 அம்ச கோரிக்கைகள்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓய்வூதியர்கள் தர்ணா!
✨

AI Highlights

  • •தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இன்று அரை நாள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிலுவையில் உள்ள புகார் மனுக்களை உடனடியாக முடிக்க வேண்டும் எனவும், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை அரசு நிர்ணயித்த காலவரம்பிற்குள் முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

  • தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டோரின் ஓய்வூதியப் பயன்களைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களைதல்.
  • அரசாணை (நிலை) எண். 417-ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி ஊதியத்தை 01.01.2016-க்குப் பின்னரும் ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவற்றுக்கு அனுமதித்தல்.
  • இளநிலை பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை அனுமதித்தல்.
  • ஊராட்சி செயலாளர்களின் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியப் பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிடுதல்.
  • அரசுத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியப் பணி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்குதல்.
  • ஊராட்சி ஒன்றியப் பணி ஓய்வூதியர்களின் வைப்பு நிதித் தொகைக்கான வட்டித் தொகையை தாமதமின்றி வழங்குதல் மற்றும் ஓய்வூதியர்கள் தகவல்களை அறிய தனி செயலி ஏற்படுத்துதல்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔