ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கொடிவேரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது பின்பற்ற வேண்டிய தீ பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

