Settings

முகப்பு/செய்திகள்/அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்: ஆய்வுக்கு வந்த அரசு பேருந்து பாதாள சாக்கடையில் சிக்கிய சோகம்!
செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்: ஆய்வுக்கு வந்த அரசு பேருந்து பாதாள சாக்கடையில் சிக்கிய சோகம்!

🕒 28 அக்., 2026, 12:00 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்: ஆய்வுக்கு வந்த அரசு பேருந்து பாதாள சாக்கடையில் சிக்கிய சோகம்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பதிக்கப்பட்ட பகுதி திடீரென உள்வாங்கியதால் ஆய்வுக்காக வந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது. பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் அரசு பேருந்து ஆய்வுக்காகக் கொண்டுவரப்பட்டபோது, பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பகுதி திடீரென உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் உருவாவதும், அவற்றைச் சீரமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், பூம்புகார் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு அரசு பேருந்து ஒன்று ஆய்வுக்காகக் கொண்டுவரப்பட்டது. அலுவலகத்திற்குள் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், பிரதான சாலையில் உழவர் சந்தை அருகே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது, பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருந்த பகுதி திடீரென உள்வாங்கியதில், பேருந்தின் முன்சக்கரம் பாதியளவு பள்ளத்தில் சிக்கியது.

அருகிலேயே பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பேருந்து ஆய்வுக்காகக் கொண்டுவரப்பட்டதால் அதில் பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மயிலாடுதுறை நகரில் இதுபோன்று சாலைகள் தொடர்ந்து உள்வாங்கும் சம்பவங்கள் நடந்து வருவதால், பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔