விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில், சிவகாசியில் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் உற்பத்தியில் பிரதானமாக ஈடுபட்டு வருகிறது. இன்று ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று காலண்டர் ஆல்பம் வெளியிடப்படும். வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று ஆல்பம் வெளியிடப்பட்டு, ஆர்டர் பெறும் பணிகள் தொடங்கியது. 2025- ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 15 சதவீதம் பேப்பர் விலை உயர்வுடனேயே காலண்டர் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் 15 சதவீதம் பேப்பர் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பேப்பர் விலை ஒரு டன் ரூ.53, ஆயிரமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.60 ஆயிரமாகவும், தற்போது ரூ.64 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் பேப்பர் விலை டன்னுக்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக பேப்பர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காகித கூல் விலை உயர்வு, கப்பலில் வரும் போக்குவரத்து செலவு காரணமாக பேப்பர் விலை உயர்ந்துள்ளதாக காகித ஆலைகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காலம் போல் காகிதத்திற்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக 30 சதவிகிதம் அச்சகங்கள் மூடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு அச்சு நிறுவனங்கள் அனைத்தும் அழிவின் விளிம்பில் சென்று விடும். நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் அச்சங்கள் மற்றும் அதனை சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பு இரு அடுக்குகளாக குறைக்கப்பட்ட போது, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து விட்டது. அதை 5 சதவீத வரி அடுக்கில் கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசு காகித ஏற்றுமதியை தடை செய்வதோடு, இறக்குமதி செய்யப்படும் காகிதம் தொடர்பான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே அச்சங்களை காக்க முடியும் என தெரிவித்தார் பேட்டி ஜெய்சங்கர்-தலைவர்
செய்திகள்
காகித தட்டுப்பாடு எதிரொலி: 40% வரை உயர வாய்ப்புள்ளதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி தகவல்
🕒 9 அக்., 2026, 04:53 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •காகிதத் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக சிவகாசியில் காலண்டர் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
