Settings

முகப்பு/தமிழ்நாடு/பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!
தமிழ்நாடு

பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!

🕒 19 நவ., 2026, 05:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பனிமூட்டம் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் வழங்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தெரியாத சூழல் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை மெதுவாக இயக்கிச் செல்வதுடன், உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் ரோந்துப் பணியாளர்கள் மூலம் கடந்த வாரம் முதல் தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமாக, அதிகாலை நேரப் பயணத்தில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தூக்கத்தை விரட்டுவதும், பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதும் ஆகும் என சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேநீர் வழங்கும் போது வாகன ஓட்டிகளிடம் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள், நடைபெறும் சாலைப் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. வாகனங்களை கவனமாக இயக்குவது, தூக்கம் வந்தால் சாலையோரமாக வாகனத்தை நிறுத்துவது மற்றும் முகப்பு விளக்குகளை கட்டாயம் எரியவிடுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பனிப்பொழிவு காலம் நீடிக்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரை இந்த விழிப்புணர்வு மற்றும் தேநீர் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த முயற்சி பெரும் வரவேற்பையும் பாராட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தற்காலிக நியமனம் எதிர்த்து தமிழகம் முழுவதும் பரபரப்பு போராட்டம்!

NESARAJAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிசெய்திகள்

குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔