விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நீதிபதி முரளிதரனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகையில் தேர்வான மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளர்கள் மூக்கம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.









