Settings

முகப்பு/செய்திகள்/பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்: தடுக்கச் சென்ற 2 வார்டன்கள் மீது தாக்குதல்
செய்திகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்: தடுக்கச் சென்ற 2 வார்டன்கள் மீது தாக்குதல்

🕒 20 அக்., 2026, 11:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்: தடுக்கச் சென்ற 2 வார்டன்கள் மீது தாக்குதல்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையேயான மோதலைத் தடுக்கச் சென்ற இரண்டு வார்டன்கள் தாக்கப்பட்டதில் பல் உடைந்து காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற இரண்டு சிறை வார்டன்கள் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டாவது பிரிவில் உள்ள விசாரணைக் கைதிகளான சுந்தர், மகேஷ் ஆகியோருக்கும், ஐந்தாவது பிரிவில் உள்ள கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, மோதலைத் தடுக்கச் சென்ற சிறை வார்டன் மணிகண்டன் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்குப் பல் உடைந்து, காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மணிகண்டன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி விசாரணை நடத்திய மற்றொரு சிறை வார்டன் காசி என்பவரையும் கைதிகள் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்திலும் அவருக்குப் பல் உடைந்து ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, அங்கு விரைந்த மற்ற சிறைக் காவலர்கள் மோதலில் ஈடுபட்ட கைதிகளைப் பிரித்துத் தனித்தனியாக அடைத்தனர். காயமடைந்த இரண்டு வார்டன்களுக்கும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைதிகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்கச் சென்ற காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔