Settings

முகப்பு/செய்திகள்/கரூரில் '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு
செய்திகள்

கரூரில் '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு

🕒 20 அக்., 2026, 01:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கரூரில் '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு
✨

AI Highlights

  • •கரூரில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அறிமுகப்படுத்தியுள்ள '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் முடிவு செய்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூரில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசு அறிமுகப்படுத்தியுள்ள '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மதுரை புறவழிச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குப் பிறகு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள '3.0' காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டம் மற்றும் இ-பதிவு நடைமுறைகள் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்குச் சங்கம் எதிரானது அல்ல. ஆனால், அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அரசு முழுமையாக ஆராய வேண்டும்.

வீட்டிலிருந்தே பத்திரங்களைப் பதிவு செய்யும் முறையில், சொத்து உரிமையை உறுதிப்படுத்துவதிலும் ஆவணங்களைச் சரிபார்ப்பதிலும் போதிய பாதுகாப்பு இல்லாவிட்டால், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடுகள் நடைபெறும் அபாயம் உள்ளது. ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்க, சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆவணங்களைச் சரிபார்த்து பதிவு செய்வதே பாதுகாப்பானது.

எங்களது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படாததால், அரசின் புதிய திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், சென்னையில் 15 நாட்களுக்குள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் குறித்த தே விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில், ஆவண எழுத்தர்களின் தொழில் பாதுகாப்பு, பொதுமக்களின் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இச்சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔