Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாகக் குளிக்கத் தடை
செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாகக் குளிக்கத் தடை

🕒 22 அக்., 2026, 05:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாகக் குளிக்கத் தடை
✨

AI Highlights

  • •மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று (22.10.2026) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் இந்தத் தடையை விதித்துள்ளனர். எனினும், அருவியைப் பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔