திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தனியார் காற்றாலை நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குஜிலியம்பாறை தாலுகாவுக்குட்பட்ட காற்றாலை நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த ரங்கநாதன் (30), ரெங்கநாதபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வ வழியே வந்த கார் ஒன்று, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த கூம்பூர் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போரூரைச் சேர்ந்த ரங்கநாதன் உயிரிழந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

