நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பந்தலூர் சாலையில் இரவு நேரத்தில் சாலையோரம் சிறுத்தை ஒன்று படுத்து உருண்ட சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பந்தலூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வனவிலங்குகளைக் காணும் ஆர்வத்தில் வாகனங்களை நிறுத்தி அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும் என்றும் வனத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
