விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது சிவகாசியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (27) என்பவர், பிரசவத்திற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரசவ அறுவை சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்குப் பிறந்த பெண் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறவினர்கள் போராட்டம்:
மருத்துவர்களின் கவனக்குறைவே உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி, ஐஸ்வர்யாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

