Settings

முகப்பு/செய்திகள்/குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழைநீர் - பொக்லைன் உதவியுடன் அகற்றிய எம்.எல்.ஏ சத்யா!
செய்திகள்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழைநீர் - பொக்லைன் உதவியுடன் அகற்றிய எம்.எல்.ஏ சத்யா!

🕒 24 அக்., 2026, 04:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழைநீர் - பொக்லைன் உதவியுடன் அகற்றிய எம்.எல்.ஏ சத்யா!
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் உதவியுடன் எம்.எல்.ஏ சத்யா நள்ளிரவில் அப்புறப்படுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பொக்ளின் உதவியுடன் நேரில் சென்று அப்புறப்படுத்தினார்.

மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தீவிர மழை பதிவாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சணப்பிரட்டி, புலியூர் வெங்கடராபுரம், வீரராக்கியம் மற்றும் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் சத்யா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்தார். மேலும், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி, தண்ணீர் வெளியேறுவதற்கு தடையாக இருந்த தடைகளை நீக்கி நீரை வடியச் செய்தார். அதிகாலை வரை அப்பகுதியிலேயே தங்கியிருந்து, தண்ணீர் முழுமையாக வடிந்த பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔