நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரை அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளின் தரத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர், பொதுமக்களுக்குத் தடையின்றி தரமான மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.









