திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்திகள்
தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கோபிசெட்டிபாளையத்தில் கிளர்ந்தெழுந்த வழக்கறிஞர்கள்!
🕒 26 நவ., 2026, 08:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








