தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் கோவை மாவட்டம் சார்பில், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. மணிமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா கோவை துடியலூரில் உள்ள எஸ்.எம்.ஆர். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்டத் தலைவர் தங்கவேல், மாவட்டச் செயலாளர் நந்தகோபால், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம், வடக்குப் பகுதி தலைவர் ரமேஷ், பொருளாளர் மணி, பொள்ளாச்சி தாலுகா தலைவர் கணேஷ், காரமடை தாலுகா தலைவர் சி.வி. துரைசாமி, கிணத்துக்கடவு தாலுகா தலைவர் கனகராஜ், கிழக்குப் பகுதி சூலூர் சசி, மத்தியப் பகுதி கருணாகரன், மேற்குப் பகுதி தலைவர் மணிஷ், தெற்குப் பகுதி தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தாலுகா நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டி. மணிமாறனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
செய்திகள்
ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் டி. மணிமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
🕒 12 அக்., 2026, 06:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கோவையில் ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் டி. மணிமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
