விருதுநகர் மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் மின்னணு பரிமாற்ற முறை (ECS) மூலம் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான மானியம் பெறத் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (5-வது தளம், அறை எண்-505) இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600005
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2027.

