Settings

முகப்பு/செய்திகள்/ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவ மக்களுக்கான மானியத் தொகை அறிவிப்பு!
செய்திகள்

ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவ மக்களுக்கான மானியத் தொகை அறிவிப்பு!

🕒 8 அக்., 2026, 04:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவ மக்களுக்கான மானியத் தொகை அறிவிப்பு!
✨

AI Highlights

  • •ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவர்களுக்கான மானியத் திட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாட்டிலிருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவர்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்தம் 600 கிறிஸ்தவர்கள் பயனடைய உள்ளனர். இதில் 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 31.01.2027-க்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600005. தகுதியுள்ள நபர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔