நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை மசோதா குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசிக்க இருப்பதால், தமிழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்த தலைமை செயலாளர், தற்போது ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கின்ற #FCRA மசோதா குறித்து எதிர்கட்சித் தலைவர் #உதயநிதிஸ்டாலின் தலைமையில், நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுப்பாரா CM sir ? #நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை குறித்து ஏற்கனவே முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் அவர்கள் தலைமையில் 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தென் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக "இது ஒன்றும் அப்படி பெரிய #பிரச்சினை அல்ல"-என்று தேர்தலின் போது தெரிவித்த விஜய், தற்போது ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸின் வஞ்சக வலையில் சிக்கி இந்த கூட்டத்தை நடத்தியது உங்களுக்கு வெட்கமாக இல்லையா CM sir ? தொகுதி மறு வரையறை என்ற தேசிய பிரச்சினையை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் அழைத்து பேசி முடிவெடுக்க முடியாத நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் #ராகுல்காந்தி , தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் எதிர் கருத்து தெரிவித்த விஜய்யை தூண்டிவிட்டு பின்னால் ஒழிந்து நின்று வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன? தொடர்ந்து காங்கிரஸ் கொண்டு வந்த #நீட் தேர்வை பாஜக தொடர்வதும், தமிழகத்திற்கு #காவிரி தண்ணீரைத் தர கூடாது என்பதில் #காங்கிரசும் - #பாஜகவும் ஓரணியில் நிற்பதும் அவர்கள் இருவருக்கும் துணை நிற்கும் நீங்களும் தமிழக மக்களுக்கு செய்யும் #எட்டப்பர் வேலை என்பது மக்களுக்கு தெரியாததா CM sir ? என் முன்னாள் சபாநாயகர் அப்பாவு சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்
செய்திகள்
தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறதா? – எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
The News Outlook
🕒 9 ஆக., 2026, 04:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •தமிழக தலைமைச் செயலகம் அரசு நிர்வாகத்துக்குப் பதிலாக தவெக கட்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமைச் செயலாளர் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
